தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை ஆரத்தழுவிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், இருவரும் ஆரத்தழுவிய நிலையில் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்தனர். சீமான் – அண்ணாமலை கட்டித்தழுவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.