தூத்துக்குடியில் இன்று தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரண கர்த்தாவாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனநிலையை சோதனை செய்ய வேண்டும். அவர் கட்சியின் தலைமை பதவிக்கு தகுதியற்றவர்” எனக் காட்டமாக விமர்ச்சித்தார்