மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு 50% கட்டண வசூல் செய்வது கண்டித்தக்கது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.