திருஞானம் இயக்கத்தில், சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன் 2 ஒன்’. அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர்.சி இருவருக்கும் இடையேயான போட்டா போட்டியாக கதைக்களம் இருப்பதை போன்று ட்ரெய்லரின் காட்சிகள் அமைந்துள்ளன.