சூடானில் துணை ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக, அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு சூடான் பகுதியில் டார்பூர் மாகாணத்தில் எல் ஃபேஷரில் நடந்த இந்த தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.