சிவகாசியில் கார்த்திக் பாண்டி என்ற இளைஞர் நந்தினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்த நிலையில் மனைவியின் சகோதரர்களால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது சூப்பர் மார்க்கெட்டின் வாசலில் கார்த்திக் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் வேகமாக பரவியதால் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டில் ஏராளமானோர் திரண்டனர், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர்.