டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 65 ரன்களும், டேவிட் மில்லர் 43 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களுக்குள் சுருட்டி தென்னாப்பிரிக்க அணி திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 53 ரன்களும், லிவிங்ஸ்டன் 33 ரன்களும் எடுத்தனர். சூப்பர் 8ல் தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி கிட்டதட்ட அரையிறுதியை உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம்.