நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், அவரது பிறந்தநாளான ஜூலை 23 அன்று இந்த 2 படங்கள் குறித்த அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா படத்தின் டீசர் அல்லது முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு மற்றும் சூர்யா – 44 படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.