செங்கோலை அகற்ற வேண்டும் என்ற கருத்துக்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் கருத்தை திமுக ஏற்கிறதா? என்ற அவர், செங்கோலை அகற்றும் முடிவை திமுக ஆதரிக்கிறதா? என்றும் வினவியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே.சௌத்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.