முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரை இருதவியல் மூத்த மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் நிலையில் அதன் பிறகு அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.