ஐசியூவில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து, இருதய மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிறையில் இருந்த அவருக்கு நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.