சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான இன்றைய விசாரணையில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.