செந்தில் பாலாஜிக்கு ஜூலை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் அவர், வங்கியின் ஆவணங்களை ஆராயக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரான நிலையில், அவரின் காவலை 47ஆவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.