சென்னையில் இருந்து துபாய் செல்ல விருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர். தொடர்ந்து உடைமைகளை ஓடுதளத்தில் இறக்கி வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஊழியர்கள், பயணிகள் யாரும் அந்த பகுதிக்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு மிரட்டலால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.