தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு பண்டிகை நாட்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து இன்று திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளும் நாளை 410 பேருந்துகளும் இயக்கப்படும். இதனைத் தவிர வழக்கமான பேருந்துகளும் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.