இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஒலிம்பிக் சைக்கிள் ஓடுபாதை தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அருகில், ₹12 கோடி செலவில் சைக்கிள் ஓடுபாதை அமைக்கப்படும். மேலும், அங்கு பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளுக்கு முதன்மை நிலை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்