சென்னையில் தாய் மற்றும் தம்பியை கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். வேளச்சேரியில் கல்லூரி படித்து வந்த நித்தேஷ், அதிக அரியர் வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய தாயார் பத்மா அடிக்கடி கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர், தாயும் தம்பி சஞ்சையும் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.