சென்னை மடிப்பாக்கம் பிரதான சாலை முதல் கீழ்க்கட்டளை சந்திப்பு வரை மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து சோதனை மேற்கொள்வதற்காக நாளை ஒருநாள்போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் மேடவாக்கம் பிரதான சாலையில் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள், இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.