சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் நடந்து சென்ற 17 வயது பள்ளி மாணவன் முகமது யூசுஃப் மாடு முட்டியதில் காயமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் மாடு ஆக்ரோஷமாக வருவதை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சென்னையில் மாடுகள் மக்களை தாக்குவது தொடர் கதையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.