சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த கடிதத்தில் பாமகவுக்கு எதிராக திமுக செயல் படுவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.