கமலா ஹாரீசின் தாய் ஷியாமளாவின் தந்தை கோபாலன், சென்னை பெசன்ட்நகரில் வசித்துள்ளார். அப்போது விடுமுறையில் அவரை பார்ப்பதற்கு அமெரிக்காவில் இருந்து மகள்கள் கமலா, மாயாவை ஷியாமளா அழைத்து வருவதுண்டு. தாத்தா மீது மிகுந்த பாசம் உண்டு, அவருடன் நடைபயிற்சி செல்வேன் என்று தனது புத்தகத்தில் கமலா நினைவு கூர்ந்துள்ளார். கோபாலன் காலமான நிலையில், கமலாவின் தாய்வழி மாமா, சித்தி மட்டுமே இந்தியாவில் உள்ளனர்.