சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விமான சேவையானது வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கொழும்பு நகரத்திற்கு ஏற்கனவே விமான சேவை செயல்பட்டு வரும் நிலையில் வேறொரு நகரத்திற்கு விமானத்தை இயக்க இண்டிகோ திட்டமிட்டது. அந்த வகையில் விமான சேவைக்கு இரண்டாவது நகரமாக யாழ்ப்பாணத்தை தேர்வு செய்துள்ளது.