இலங்கை அதிபர் தேர்தல் செப்.21ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் அதிபர் ரணில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, நிதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுகின்றனர்.