இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி நிலைப்புத்தன்மை அறிக்கையின் படி, வணிக வங்கிகளின் செயல்படாத கடன்கள் அல்லது மொத்த செயல்படாத சொத்துக்கள் கடந்த நிதியாண்டின் இறுதியில் 12 ஆண்டுகளில் இல்லாத 2.8 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயல்படாத சொத்துக்கள் என்பது 90 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள முன்பணம் அல்லது கடனாகும். நடப்பு நிதியாண்டின் முடிவில் இவை 2.5 சதவீதமாக குறையும் என
குறிப்பிட்டுள்ளது.