இந்தியாவில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு ஊழல் மலிந்து கிடந்ததாகவும், தங்கள் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலுரையாற்றி வரும் அவர், செயல்படுத்த முடியாத அனைத்தையும் தங்கள் அரசு செய்து காட்டியுள்ளதாக பெருமிதம் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ததாக தெரிவித்துள்ளார்