ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்ற போது, ரஜினி (36) என்பவரின் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் திடீரென வெடித்து சிதறியது. இதில், நிலை தடுமாறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.