ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி மனநிறைவை தருவதாக சுப்மன் கில் கூறியுள்ளார். சேசிங்கில் அதிக கவனம் செலுத்தியதால் வெற்றி எளிதாக இருந்ததாக கூறிய அவர், முதல் போட்டியில் எங்களால் அதைத் செய்ய முடியாமல் போனது, பெரிய ஏமாற்றமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். முதல் டி20 போட்டியில் 115 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் திணறிய இந்திய அணி, நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 152/7 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அதிரடியாக 53 பந்துகளில் 93* ரன்களும், சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 5வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.