சேலம் மற்றும் சென்னை இடையே விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இண்டிகோ நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் சேலம் மற்றும் சென்னை இடையே வாரம் 3 நாட்களுக்கு 2 முறை விமான சேவை இயக்கப்படும் என அறிவித்துள்ளது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களில் 2 முறை விமான சேவை இயக்கப்படும் எனவும் இண்டிகா நிறுவனம் அதற்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.