தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயன் தரும் வகையில் சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாமில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல், jio infocomm, trends, smart ஆகிய நான்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் வரை இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.