சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி காலத்தை நீட்டித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். ஜெகநாதனின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடை நிலையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே 19 வரை ஜெகநாதனின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
முறைகேடு புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு உள்ள நிலையில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி சேலம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.