சமீபத்தில் ஆக்ராவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளம் ஜோடி 2022இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இறுதியாக, அந்த பெண் போலீஸ் ஆலோசனை மையத்திற்கு வந்து, தனது கணவர் தனக்கு சேலை வாங்கித் தரவில்லை என்று புகார் அளித்துள்ளார். இந்த ஜோடியின் வித்தியாசமான சண்டையை கண்டும் காணாமல் போலீசார் இருந்துள்ளனர். நீதி வழங்க வேண்டும் என தொல்லை கொடுத்து வருகிறாராம்.