வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக காட்ட வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆனது கடந்த காலங்களில் வணிகம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் வருமானமாக கணக்கில் கொள்ளப்பட்டது. இனிமேல் இதனை சொத்து வருவாயாக தான் காட்ட வேண்டும். இதனால் வீட்டு வாடகை மூலம் வருமானம் பெறுவோர் குறைவான வரி செலுத்தி கணக்கு காட்டுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.