தமிழகத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடி விபத்தில் சதிஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சக்திவேல் என்பவரின் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கட்டடம் இடிந்து தரை மட்டமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.