துருக்கியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ரஷ்யாவின் மிக அழகான பைக்கர் என வர்ணிக்கப்படும் தத்யானா ஒசோலினா (38) உயிரிழந்தார். நெடுஞ்சாலையில் BMW இரு சக்கர வாகனத்தில் சென்றபோது டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாகசப் பயணங்கள் மேற்கொண்டு பிரபலமான ஒசோலினாவுக்கு, டிக்டாக்கில் 50 லட்சம், யூடியூபில் 20 லட்சம், இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.