இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்ஷர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு தேர்வுக்குழு வாய்ப்பளிக்கலாம் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.