ஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பாக அம்மாநில பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதன் பிறகு தேர்தல் நடத்தப்படலாம் எனவும், தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் அவர் நிர்வாகிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 90 தொகுதிகளிலும் பாஜக தனித்துப்போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.