சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தியதாக கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.