முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு இந்த மாதம் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாகவும் அதற்கு முன்னதாக அமைச்சரவையை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சட்ட விரோத பணம் பரிவர்த்தனை வழக்கில் கைதானதால் அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமின் கிடைக்க கூடும் என்று திமுக எதிர்பார்க்கிறது. அப்படி கிடைத்து வெளியே வந்ததும் மீண்டும் அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.