மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 6 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் கர்ப்பமாக உள்ளனர். ஜிகா வைரஸ் பாதிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மாநில சுகாதாரத்துறை தற்போது உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புனே மாநகராட்சி அதிகாரிகள் வைரஸைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஜிகா வைரஸ் பரவுவதற்கு காரணமான கொசுக்களை ஒழிக்க ஊழியர்கள் அனைத்து பகுதிகளிலும் துரித பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.