ஜியோ மொபைல் கட்டணம் ஜூலை மூன்றாம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது. இந்த நிலையில் பலரும் பழைய திட்டத்தில் வேகவேகமாக ரீசார்ஜ் செய்து வரும் நிலையில் ஜியோ வின் பிரபலமான பிளான்களான 395 ரூபாய் மற்றும் 1559 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களை ஜியோ நீக்கி உள்ளது. 395 ரூபாய் திட்டம் 88 நாட்கள் சேவையையும், 1559 ரூபாய் திட்டம் 336 நாட்களுக்கான சேவையையும் வழங்கி வந்தது. இந்த திட்டம் பேசிக் போன் வைத்திருப்பவர்களிடம் பிரபலமானவை.