தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாதவர்கள் ஜூலை மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மற்றும் ஜூலை மாத பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர் மே மாதத்திற்கான பொருள்கள் முற்றிலும் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை அறியாமல் இபிஎஸ் திமுக அரசு மீது வீண்பழி சுமத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.