2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.