டெல்டா மாவட்டங்களில் ஜூன் 20ம் தேதி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி இழந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பயிர் கடனுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஜூன் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.