தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இன்னும் சில நாட்களுக்குள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.