அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்ட்களும் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இருந்தாலும் எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகள் BBPS உடன் இன்னும் இணைக்கப்படவில்லை. இதனால் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு இந்த வங்கிகளின் கிரெடிட் கார்டு பில்களை போன் பே மற்றும் cred போன்ற செயலி மூலம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.