2024-25 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 22ஆம் தேதி பொருளாதார ஆய்வு அறிக்கையும் ஜூலை 23ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்