இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களது படகுகளை மீட்பதற்கும் இந்திய வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.