மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என புதக தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, மறுவாழ்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மனிதநேயமற்றது. பட்டினி சாவு ஏற்பட்டால் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். நெல்லை ரயில் நிலையம் முன் ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்துள்ளார்