ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 53 பேர் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஈபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், 2021 ஆம் ஆண்டு 53 பேர் உயிரிழந்த போது யாரும் ஜெயலலிதாவை பதவி விலக சொல்லவில்லை என்றார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருதியே நிதி உதவி அளிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.