சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், இரண்டு திராவிட தலைவர்களுக்கு நடுவில் ஒரு பார்ப்பன பெண் படுத்திருக்கிறார் என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் ஒருவராக இருக்கும் முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சீமான் அவதூறாக பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.